son takes private helicopter to attend his father’s funeral:ஹெலிகாப்டரில் பறந்து வந்த மகன் !

தந்தையின் மரணத்திற்காக ஹெலிகாப்டரில் பறந்து சென்ற மகன் புதுக்கோட்டையில் தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மகன் வெளிநாட்டில் இருந்து பெங்களூரில் வந்தடைந்தார்.

சசிகுமார் கம்பெனி வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்தார். அப்போது சசிகுமாருக்கு அவரது தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்று கருதி பெங்களூரிலிருந்து ரூ 5 லட்சம் வாடகை கொடுத்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கினார்.

பின்னர் புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியை பரபரப்பாகியது.