நினைத்ததை கொடுக்கும் சோமவார விரதம் !

திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய தினமாகும்.சோமன் என்றால் சந்திரனைக் குறிக்கும்.ஒவ்வொரு திங்களும் ஈசனை நினைத்து இந்த விரதம் இருக்கலாம்.கார்த்திகை மாதம் இருப்பது மிக சிறப்பானது.

இந்த விரதம் இருப்பவர்கள் அவர்களின் பிராத்தனை கண்டிப்பாக ஈசன் நிறைவேற்றிக்கொடுப்பர்.இந்த விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து விட்டு வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே உணவு எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணம் கைக்கூடி வரும்.மேலும் தம்பதியரின் ஒற்றுமை சிறக்க இந்த விரதம் மேற்கொள்ளலாம்.