கேரளாவில் உள்ள சுற்றுலா இடங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு !

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்தன.மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மும்பை ,கர்நாடகா,டெல்லி மற்றும் டெல்லி போன்ற இடங்களில் அதிகம் பரவின.

தற்போது அறிவித்துள்ள ஊரடங்கால் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.தற்போது சில மாநிலங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.சுற்றுலா இடங்களையும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை உள்நாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தெரிவித்துள்ளது.

கடற்கரைகள், மலைப்பகுதிகள் மற்றும் ஹவுஸ்போட் சேவைகளை வழங்கும் இடங்கள் உட்பட அனைத்து இடங்களும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும்.சுற்றுலா தலங்களுக்கு வருபவர்கள் சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அவைகள்,இரண்டு வாரங்களுக்கு முன் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்கள், அல்லது 72 மணி நேரத்திற்கும் குறைவான ஆர்டி-பிசிஆர் எதிர்மறை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அல்லது ஒரு மாதத்திற்கும் மேலான கோவிட் பாசிட்டிவ் முடிவை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.