குறைந்து வரும் முட்டை விலை !

நாமக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக முட்டை விலை சரிந்து வரும் நிலையில் இன்று முட்டை விலை மேலும் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 4.70 என இருந்த நிலையில் இன்று 20 காசுகள் குறைந்து ரூ.4.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

குறைந்து வரும் முட்டை விலையால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.மேலும் சென்னையில் 5 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.