Snake inside cooker: குக்கரில் குடியிருந்த நல்ல பாம்பு

snake inside cooker
குக்கரில் நல்ல பாம்பு

Snake inside cooker: கடலூர் கம்மியம்பேட்டை மீனாட்சி நகரை சேர்ந்தவர் இளமாறன். இவரது வீட்டின் அலமாறியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தனர். அப்போது, சாப்பாடு செய்ய பயன்படுத்தும் பிரஷர் குக்கர் ஒன்றில் சுமார் 4 அடி நீள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி வெளியே வந்துள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளமாறன் குடும்பத்தினர். அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் நபரான செல்வா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த செல்வா நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை சாக்குப்பை ஒன்றில் பத்திரமாக எடுத்துச்சென்று வனப்பகுதியில் விட்டுவிட்டார். அதன் பின்னரே இளமாறன் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வீட்டின் அலமாறியில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் நல்ல பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் கடலூர் மீனாட்சி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Secret For Hair Growth : தலைமுடி வளர உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை தேவை