மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்துகள்..!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சிறிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் 210 சிறிய பேருந்துகள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் 66 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

எஞ்சிய பேருந்துகளை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆலந்தூர், விமானநிலையம், கோயம்பேடு, திருவெற்றியூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.