வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ஒன்றானா சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா, வினை, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நெல்சன் பல வருடங்களுக்கு முன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தினை இயக்கினார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே பாதியுடன் படம் கைவிடப்பட்டது. அதன் பின் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் நெல்சன். அதன் பிறகு மீண்டும் இயக்குனரான நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற டார்க் காமெடி படத்தினை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களமாக இருந்த கோலமாவு கோகிலா ரசிகர்கள் மத்தியில் நெல்சனுக்கு மிக பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

அதன் பின் தனது நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தினை இயக்கினார். இப்படத்தினை பத்தின அறிவிப்பு வந்த உடனேயே எதிர்பார்ப்பு அதிகமானது. அனிருத் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. திரையரங்கா? ஓடிடியா? என்ற குழப்பத்தில் இருந்த படக்குழு ஒரு வழியாக அடுத்த மாதம் 9ம் தேதி திரையங்கில் படம் வெளியாகும் என்று அறிவித்தது. இன்று டாக்டர் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

யாரவது இந்த மாதுரி ஒரு ஐடியா குடுப்பானா? என்று தொடங்கும் இந்த ட்ரைலர் மிரட்டலாவே உள்ளது. சிவகார்த்திகேயனை வேற ஒரு பரிமாணத்தில் காட்ட கூடிய படமாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை. இந்த படத்தையும் டார்க் காமெடி கான்செப்டில் இயக்கி உள்ளார் நெல்சன். வில்லனாக வினை ட்ரைலரில் அசத்துகிறார். சிவகார்த்திகேயன் மிகவும் அமைதியாக காணப்படுகிறார். இந்த அமைதி திரையரங்கில் தெறிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ட்ரைலர் சிறிது கோலமாவு கோகிலாவை நியாபக படுத்தினாலும் மாஸாக அமைந்துள்ளது.

தற்போது நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தினை இயக்கி வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் மோதிக்கொண்ட தொண்டர்கள்