HBD Simbu: ‘பத்து தல’ படக்குழுவினர் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!

simbu birthday
'பத்து தல' படக்குழுவினர் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

HBD Simbu: பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

சர்ச்சைகள், படங்கள் வர தாமதம் என பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இவருக்கான ரசிகர் பட்டாளத்தில் என்றுமே குறை ஏற்பட்டது இல்லை. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்த சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து சிறுவயது பையன் லுக்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் சிம்புவா இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல தடைகளை தாண்டி கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. அடுத்த சில நாட்களில் ‘மாநாடு’ படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார். ‘மாநாடு’ படம் சிம்புவின் கம்பேக் படமாக ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டது.

இந்தப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் இவரிந பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படக்குழுவினர் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தில் AGR என்ற கேங்ஸ்டர் ரோலில் நடித்துள்ளார் சிம்பு. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வேறலெவலில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !