மைக்கேல் கோர்சல் – ஸ்ருதிஹாசன் காதல் பிரிவுக்கு பிறகு ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதள பக்கத்தில், என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புதிய பாதை ஆரம்பமாகிறது என பதிவிட்டு இருந்தார்.
தற்போது சிங்கிளாக இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, திருமணம் குறித்த தகவலில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார். மேலும் முன்னாள் காதலரை வெறுக்கிறீர்களா என்ற கேள்விக்கு நான் யாரையும் வெறுக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.




