Army men died in arunachala pradesh : அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !

Army men died in arunachala pradesh : அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
Army men died in arunachala pradesh : அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !

Army men died in arunachala pradesh: பிப்ரவரி 6 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் செக்டரில் உயரமான பகுதியில் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்களின் உடல்கள் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிங் ஒரு ட்வீட்டில், “அருணாச்சல பிரதேசத்தின் கெமாங் செக்டரில் பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. இந்த துணிச்சலான வீரர்கள் தேசத்திற்கு சேவை செய்யும் போது உயிர் இழந்தனர். அவர்களின் துணிச்சலுக்கும் சேவைக்கும் தலை வணங்குகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் உயிரிழந்தோர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். “அருணாச்சல பிரதேசத்தில் உயரமான பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில் என் எண்ணங்கள் பிரிந்த குடும்பங்களுடன் உள்ளன. தேசத்திற்கான அவர்களின் தன்னலமற்ற சேவை எப்போதும் நினைவுகூரப்படும்.Army men died in arunachala pradesh

நேற்று முன் தினம் மிக உயர்ந்த மலைப் பகுதியான காமெக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Karnataka hijab row : ஹிஜாப்பை எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பெண் !