1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..!

சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஒ.என்.ஜி.சி ஆகிய மூன்று பங்குகள் தவிர, மற்ற அனைத்துப் பங்குகளின் விலையும் குறைந்துள்ளன.

இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் குறைந்து 49,744ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306 புள்ளிகளை இழந்து 14,675ஆக இருந்தது.

வேதாந்தா, ஜூப்ளியண்ட் ஃபுட்ஸ், டொரண்ட் பவர், அமரா ராஜா பேட்டரி, அதானி போர்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. பி.வி.ஆர், கோத்ரேஜ் ப்ராப், எம் & எம், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபின், டாக்டர் ரெட்டிஸ் லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

தவிர, கடந்த சில வாரங்களாக சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்ததால், வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிறது. சந்தை கொஞ்சம் இறங்கினால்தான் இந்த வேல்யூவேஷன் குறையும் என்பதே இன்றைய நிலையாக இருக்கிறது. தவிர, கொரோனா காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் இப்போது நல்ல லாபத்தில் இருப்பதால், பங்கினை விற்று லாபம் பார்த்து வருகிறார்கள். இதனாலும் சந்தைப் புள்ளிகள் குறைந்துள்ளன.