கர்நாடகா பள்ளிகள் மூன்று வார காலத்திற்கு விடுமுறை: எடியூரப்பா

கரோனா தொற்று அச்சம் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு வரும் 12 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் பரவி வரும் கரோனா தொற்றால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் மூலம் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு வரும் 12ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன் கூட்டிய தசரா வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.