உற்சாகமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழகத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்ட 9 மற்றும் 11-ம் வகுப்புகளைப் பொறுத்தவரையில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் சில வகுப்புகள், பாடப்பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம் எனவும், காலை, மாலை என 2 ஷிப்டு முறையில் செயல்படலாம் எனவும் கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. போதுமான ஆசிரியர்கள், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கியது.