Sasikanth Senthil IAS: கர்நாடக மாநில கங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் நியமனம்

KPCC social media : தென்கன்னட‌ மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து, அண்மையில் அப்பதவியை ராஜிநாமா செய்தவர் சசிகாந்த் செந்தில். இதனைத் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் இப்போதுதான் க‌ர்நாடக அரசியலில் களமிறங்கியுள்ளார்.

பெங்களூரு: Sasikanth Senthil IAS: கர்நாடக மாநில கங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சசிகாந்த் செந்தில் ஐஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவுப் பிரிவு திறம்பட செயல்படவில்லை என அக்கட்சியினர் வட்டாரத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் நியமித்துள்ளது.

தென்கன்னட‌ மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து, அண்மையில் அப்பதவியை ராஜிநாமா செய்தவர் சசிகாந்த் செந்தில். இதனைத் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் இப்போதுதான் க‌ர்நாடக அரசியலில் களமிறங்கியுள்ளார். தற்போது நலிவடைந்த காங்கிரஸ் கட்சியின் சமூக பிரிவின் தலைவர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சியின் மேலிடம். சுனில் குணகோலுவை அப்பிரிவில் துணை தலைவராக பணியாற்றுவார் என கட்சியின் மேலிட‌உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பாஜக நிர்வாகத்தின் தோல்வியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு காங்கிரஸ் கட்சி தவறி வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தெரிவித்த கருத்தும், சமூக ஊடகப்பிரிவின் உள் ஆய்வுமே முக்கியக் காரணம். இதன் காரணமாகவே புதியவர்களை அக்கட்சியின் மேலிடம் நியமனம் செய்துள்ளதாக தெரிகிறது.

மாநிலத்தில் பல மக்கள் விரோதக் கொள்கைகளை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் அது மக்களை சென்றடைவதில் மாநில காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதை வைத்து அடுத்த 8 மாதங்களுக்கு கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அக்கட்சியில் புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல மாவட்ட, பொதுச் செயலாளர்கள் நியமனத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வரும் நாட்களில் பாஜகவுக்கு எதிராக‌ சமூக வலைதளத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூற‌ப்படுகிறது. காங்கிரஸை விட இடதுசாரிகள் மற்றும் முற்போக்கான‌ சமூக ஊடக‌ங்கள் சிறப்பாக செயல்படுகின்றன‌ என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பாஜகவுக்கு சரியான பதிலைக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரஸ் அதில் தோல்வியடைந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனைத் தொடர்ந்து அக்கட்சி மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளின் இடையில், இந்த புதிய நியமனம் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய அளவில் அனைத்து கட்சியினராலும் அறியபட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழருமான எஸ்.எஸ்.பிரகாசத்தின் மறைவிற்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் தமிழரான சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.