உடல்நல குறைவால் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலா !

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார் சசிகலா.மேலும் அவர்க்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டது என்றும் அவரை பரிசோதித்த சிறை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கூறினார்கள்.

மேலும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா அவருக்கு சி.டி ஸ்கேன் எடுப்பதற்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

மேலும் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் .அப்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையசைத்து காட்டியுள்ளார்.