சசிகலா விடுதலை: ஆடம்பரமாக அழைத்து செல்ல 5 ஆயிரம் கார்கள் தயார்

சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் அவரை தமிழ் நாட்டுக்கு அழைத்துச் செல்ல 5 ஆயிரம் கார்கள் ஊர்வலம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா  சிறைச்சாலையில் உள்ள  சசிகலா மற்றும் சுதாகரன் இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இவர்கள்  சொத்துக்குவிப்பு வழக்குகிற்கு   10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கோரி விடுதலை ஆவதற்கு முன்பு கட்ட வேண்டும் என கோரி சிறைச்சாலையும் கூறியிருந்தது

சசிகலா தரப்பில் 10 கோடி ரூபாய் காசோலை மூலம்    அபராதமும் கட்டினார்கள் அவர் எப்போது விடுதலை செய்வார் என கேள்வி எழுந்த பொழுது வரும் 2021 ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என கூறி சிறைச்சாலை துறையினர் பதிலளித்தனர் இந்நிலையில் தற்பொழுது வரும் 3ஆம் தேதியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு தினம் என்பதால் அங்கு சென்று அவர் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி வந்துள்ளன

3ஆம் தேதி இவரை விடுதலை செய்ய கோரி சிறைச்சாலை சூப்பிரண்டிடம் அனுமதி கோரி சசிகலா தரப்பில் மனு கொடுத்தது உண்மைதான் ஆனால் அதற்கு பல்வேறு சட்ட திட்டம் இருப்பதால் அவர் கண்டிப்பாக மூன்றாம் தேதி விடுதலை செய்யப்பட மாட்டார் சட்டதிட்டங்கள் படி அவர் கொடுத்த கடிதம் சரிபார்த்து திரும்ப வருவதற்கு குறைந்தது ஒரு வார காலம் ஆகும் நிலையில் சசிகலாவை அழைத்துச் செல்வதற்காக தமிழ்நாடு சென்னைக்கு அழைத்துச் செல்லும் பட்சத்தில் 5 ஆயிரம் கார்கள் கொண்டுவரப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.