ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை? வெளியான தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவர் என தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகுவார். சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்று என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பல மாதங்களாக நீடிக்கும் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here