ரூபாய் 10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையான 10 கோடி ரூபாயை சசிகலா இன்று செலுத்துகிறார். 1991 முதல் 96ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, இதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா காலமானதால் மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.