ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அமைக்க 12.32 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது

ஜெயலலிதா நினைவிடத்தில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்க, 12.32 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகளை மேற்கொள்ள, செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, அரசிடம், 12.32 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. அந்த நிதியை, தற்போது அரசு ஒதுக்கி உள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில், அறிவு சார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் பராமரிப்பு, சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.