நடிகர் மாறனின் மறைவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்

நடிகர் மாறனின் மறைவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது இரங்கலை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

மாறனுக்கு வயது 48. கில்லி படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்திலும், வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் நண்பராகவும் நடித்ததன் மூலம் இவர் புகழ் பெற்றார். தலைநகரம் படத்தில் வடிவேலு சொல்லும் நானும் ரவுடிதான் நகைச்சுவை காட்சி இவரை பெரிதும் பிரபலப்படுத்தியது.

தற்போது சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.