சைனோவாக் கொரோனாவை ஒழிக்கும்

சைனோவாக் பயோடெக் சீன நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவை வெற்றிகரமாகத் தடுத்து ஒழிப்பதாக இந்தோனேசியாவின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தோனேசியாவின் சுகாதார அமைச்சர் பியுடி குனாடி சாடிகின் என்பவர் கூறும்போது, சைனோவாக் வாக்சின் 2 டோஸ்க்ளையும் எடுத்துக்கொண்ட 25,374 பேரையும் தடம் கண்டதில் 100% மரணத்தை தடுப்பதையும் 96% மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையை தடுப்பதையும் கண்டுபிடித்துள்ளோம். 94% பணியாளர்களும் தொற்றிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இதன் கிளினிக்கல் ட்ரையல்களில் கண்டதைவிட தற்போது அசாதாரண மருத்துவத் தடுப்பு குணங்களைக் கொண்டுள்ளது, என்றார்.

இந்த வாச்கிசனை எடுத்துக் கொண்ட மருத்துவப் பணியாளர்கள்பாதிக்கப்படும் விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது என்கிறார் அவர். ஆனால் இப்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் உருமாறிய கொரோனா வகை இந்தோனேசியாவில் இல்லை என்பதையும் இதில் கவனிக்க வேண்டியுள்ளது.

கிளினிக்கல் ட்ரையல் காலக்கட்டத்தை விட இப்போது மிகவும் நன்றாக சைனோவாக் வேலை செய்கிறது என்கிறது இந்தோனேசியா.

சைனோவாக் திறன் பற்றி சீனாவில் உள்ள செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இது குறித்த முழு விவரங்கள் இல்லாமல் சைனோவாக் திறன் பற்றி இப்போதைக்கு எங்களால் கூற முடியாது” என்றார்.

சைனோவாக் கொரோனா வாக்சின் திறன் எப்போது தெரியவரும் எனில் பெரிய மக்கள் தொகைக்குப் போட்ட பின்பு அது பெரிய கொரோனா பெருந்தொற்றை, பெரும்பரவலைத் தடுக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால் வளரும் நாடுகள், ஏழை நாடுகளில் போதிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்தச் சோதனையில் ஈடுபடுவது கடினம்.

இந்தோனேசியாவின் மருத்துவப் பணியாளர்கள் சைனோவாக் எடுத்துக் கொண்ட பிறகு கிடைத்த முடிவுகள் அதே போல் பிரேசிலில் 45,000 பேருக்கு போடப்பட்ட கொரோனாவாக் போன்ற தடுப்பூசிகள் மரண விகிதத்தை சீரியஸ் கேஸ்களிலும் கூட தடுப்பதாக தெரியவந்துள்ளது என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.