நயன்தாரா நடித்த புதிய படம் அமேசான் பிரைமில்..!

நயன்தாரா நடித்த புதிய மலையாளப் படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.தமிழில் பிஸியாக நடிக்கையிலும் மலையாளத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா

அவரது நடிப்பில் ஏப்ரல் 9 வெளியான த்ரில்லர் திரைப்படம் நிழல். நயன்தாரா இதில் எட்டு வயது சிறுவனின் தாயாக நடித்திருந்தார். குஞ்சாகா போபன் பிரதான வேடம் ஏற்றிருந்தார். 

இந்தப் படத்தை அப்பு என்.பட்டாத்திரி இயக்கியிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு எடிட்டர். சிறந்த எடிட்டருக்கான மாநில அரசின் விருது வாங்கியவர். நிழல் இவரது முதல் படம். ஏப்ரல் 9 கொரோனா பாதிப்பு தீவிரத்தை நோக்கி நகர்ந்த நிலையில் நிழல் வெளியானதால் ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குக்கு செல்லவில்லை. இந்நிலையில் அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகியுள்ளது.