அமெரிக்க வரலாற்றில் திருநங்கை எம்.பியாக தேர்வு

அமெரிக்க வரலாற்றில் முதல் திருநங்கை எம்.பியாக சாரா மெக்ப்ரைட் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று அதிகாலை தொடங்கியது. 270 இடங்கள் வென்றால் அதிபராகலாம் என்ற நிலையில் ஜோ பிடன் 234 இடங்களும், டிரம்ப் 214 இடங்களும் இதுவரை வென்றுள்ளனர்.

இன்னும் சில மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாகவில்லை. அதற்குள் டிரம்ப் ஓட்டு எண்ணிக்கையை தடை செய்ய கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் முறையாக சாரா மெக்பைட்(30) என்ற திருநங்கை எம்.பி.,யாக வென்று சாதனை படைத்துள்ளார். மேம்பட்ட சமூகமான அமெரிக்காவிலேயே 2020-ல் தான் திருநங்கை எம்.பியாக முடிந்திருக்கிறது.