செப்டம்பர் 10ஆம் தேதி வருகிறது சந்தானத்தின் டிக்கிலோனா படம் !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகருள் ஒருவர் சந்தனம்.படத்தில் சந்தானம் இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட் என்ற அளவிற்கு சிறந்த நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர்.

தற்போது இவர் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு நடிகராக படம் நடித்து வருகிறார்.கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.மேலும் வெளிவரும் படங்கள் அனைத்தும் OTT தளங்களில் வெளியாகிவருகின்றன.

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக்கிலோனா’. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.தற்போது ‘டிக்கிலோனா’ செப்டம்பர் 10ஆம் தேதி அன்று வெளியாகும் என்று ஜீ5 ஓடிடி தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் டிக்கிலோனா படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.இந்த படத்தை காண சந்தானத்தின் ரசிகர்கள் வெயிட்டிங் என தெரிவித்து வருகின்றனர்.