சகுந்தலம் படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார்

அந்த வகையில், சகுந்தலை என்ற புராண கதை சினிமா படமாக தயாராகிறது. அந்தப் படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

இதில் டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகர், தேவ் மோகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சகுந்தலையாக நடிக்கும் சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிகிறது.