அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை- அனிகா சுரேந்திரன்

சமீபத்தில் வைரலான கவர்ச்சி வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது மார்பிங் செய்யப்பட்டது எனவும், நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர், உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், இது என்னை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது. இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னது போல் இது நன்றாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ.

அதைப் பார்க்கும்போது, நான் கூட அதிர்ச்சியடைந்தேன். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.