Russia-Ukraine war: ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்

RussiaUkraineConflict-Ukraine-Defense-Ministry-Says
உக்ரைன் ராணுவம்

Russia-Ukraine war: ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது.

ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷியா தாக்குதலை அதிகப்படும் என அஞ்சப்படுகிறது.

மேலும் ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது.

வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

Russia-Ukraine War 

இதையும் படிங்க: Supreme Court: பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி