Russia-Ukraine war: உக்ரைனில் ரஷ்ய படைகள் குண்டு மழை

russia-starts-military-operation-in-ukraine
ரஷ்ய படைகள்

Russia-Ukraine war: ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவைன் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்தது. ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்தார், ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, தனது படைகள் சிலவற்றை பாசறைக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.

ஆனாலும், ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ்-இல் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைய தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புடினின் ராணுவ நடவடிக்கையை உலகம் தடுக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ராஷ்யாவே காரணம் எனவும், இதற்கான விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரஷ்யா – உக்ரைன் நடவடிக்கையில் தலையிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்த இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

Russia has seized 2 villages in east, says Ukraine

இதையும் படிங்க: Russia-Ukraine war: ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்