Valimai Review: அஜித்தின் வலிமை படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

actors-including-sivakarthikeyan-wishes-for-valimai-grand-success
அஜித்தின் வலிமை

Valimai Review: நடிகர் அஜித்குமார் நடித்து இரண்டு வருடங்களுக்கு பின்பு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் இன்று வெளியானது. மதுரையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது.

நள்ளிரவு ஒரு மணி முதல் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு முன்பு குவிந்தனர். அஜித்குமார் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள், மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் முன்னதாக முதல் நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். பலரின் பூரிப்பிற்கு இந்தப் படம் காரணமாக அமைந்துள்ளனர். ரசிகர்களும் திரையரங்குகளில் குவிந்து படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள அஜித்தின் இந்தப் படத்தை கொண்டாட்டத்துடன் பார்த்து வருகின்றனர்.

அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்டவற்றையும் அவர்கள் திரையரங்குகளில் செய்ததை பார்க்க முடிந்தது. இதுமட்டுமின்றி போனிகபூர் காருக்கும் அவர்கள் பாலபிஷேகம் செய்தனர். இதனிடையே படத்தின் வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கடின உழைப்பிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல நடிகர் ஆர்யாவும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல இயக்குநர் வெங்கட்பிரபு, வரலட்சுமி சரத்குமார், பார்வதி, கௌதம் கார்த்திக், கலையரசன், ரம்யா சுப்ரமணியன், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதை தவிர்த்து மகேஷ்பாபு உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

Celebrities enjoying valimai movie

இதையும் படிங்க: Russia-Ukraine war: ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்