Russia-Ukraine crisis: உக்ரைனில் சில இடங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம்

russia-ukraine-crisis-live-updates-march-7-volodymyr-zelenskyy-vladimir-putin
தற்காலிகமாக போர் நிறுத்தம்

Russia-Ukraine crisis: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராக உக்கிர போராக மாறி வருகிறது.

ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷியா களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வருகிறது. ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷியா தேடிக்கொண்டுள்ளது. தலைநகர் அருகே நடந்த போரில் குழந்தைகளும் பலியானது நெஞ்சை நொறுக்குகிறது.

Russia-Ukraine crisis

இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: Tiktok: ரஷ்யாவை விட்டு வெளியேறும் டிக்-டாக்

இந்தநிலையில், உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது ரஷியா.

மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 12-வது நாளாக எட்டியுள்ள நிலையில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Russia-Ukraine crisis: Russia to hold fire, open humanitarian corridors in Sumy, 3 other Ukrainian cities

இதையும் படிங்க: Tiktok: ரஷ்யாவை விட்டு வெளியேறும் டிக்-டாக்