Tiktok: ரஷ்யாவை விட்டு வெளியேறும் டிக்-டாக்

tiktok-suspends-creation-new-video-content-russia-ukraine
டிக்-டாக்

Tiktok: ரஷ்யாவில் தற்காலிகமாக நேரலை ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்துவதாக டிக் டாக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், டிக் டாக், யூ டியூப் என எண்ணற்ற சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் செயல்படுகிறது. எழுத்து எண்ணிக்கை வரம்பின்றி எழுத அனுமதிக்கும் ஃபேஸ்புக்கிற்கு இங்கு பயனாளர்கள் அதிகம். அதேசமயம், ரத்தினச் சுருக்கமாக 2 அல்லது 3 வரிகளில் மட்டுமே பதிவு வெளியிட அனுமதிக்கும் டிவிட்டருக்கும் இங்கு தேவை அதிகம்.

அதுபோலத்தான் வீடியோக்களை மையமாக கொண்டு செயல்படும் யூ டியூப் மற்றும் டிக் டாக் ஆகியவை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் நாம் வீடியோக்களை வெளியிட முடியும் என்றாலும், பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்கு உரிய இடமாக யூ டியூப் மற்றும் டிக் டாக் இருக்கின்றன.

ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போலி தகவல்களை வெளியிடுவோருக்கு 15 ஆண்டுகள் உள்ளிட்ட சிறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து பணியாளர்கள் பாதுகாப்பு கருதி நேரலை ஒளிபரப்பு மற்றும் புதிதாக வீடியோக்கள் பதிவிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக டிக் டாக் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேநேரம் செய்தி பகிர்வு தடை செய்யப்படாது என்றும் சேவைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதும் முழு வீச்சில் மீண்டும் இயங்கத் துவங்கும் என டிக் டாக் தெரிவித்துள்ளது.

TikTok temporarily bans new video creation in Russia

இதையும் படிங்க: CBSE Term 1 Results 2021 : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு