Russia-Ukraine Crisis: உக்ரைன் சுமி நகர் குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு

russia-ukraine-crisis-fleeing-ukrainians-caught-as-russia-steps-up-attack
9 பேர் உயிரிழப்பு

Russia-Ukraine Crisis: உக்ரைன் -ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கரமடைந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.

இதனையடுத்து, உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது. மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி ஆகிய நககரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது.

Russia-Ukraine Crisis

இதனிடையே,சுமி பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவ ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில்,உக்ரைனின் சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்த பட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய எல்லைக்கு அருகில் உள்ள சுமி நகரில் பல நாட்களாக கடும் சண்டை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Russia-Ukraine Crisis: 9 Killed In Air Strike On Ukraine’s Sumy, Say Rescuers

இதையும் படிங்க: Free bus travel: கட்டணமின்றி தினமும் 8 லட்சம் பெண்கள் பயணம்