Festival Chariot: திருவிழாவில் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்த தேர்

festival-chariot-fallen-down-at-the-therotta-festival-in-ulundhurpettai
தலைகுப்புற கவிழ்ந்த தேர்

Festival Chariot: மாசி மாதம் மங்கலங்கள் நிறைந்த மாதம் இதனால் அனைத்து ஆலயங்களிலும் பிரம்மோற்சவம் திருவிழாக்கள் , தெப்ப உற்சவம், தேர்த்திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் அமைந்துள்ளது அங்காள அம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நடப்பாண்டிற்கான திருவிழாக்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் திடீரென எதிர்பாரதவிதமாக எலவனாசூர்கோட்டை கள்ளக்குறிச்சி சாலையில் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் கோவில் பூசாரி பலத்த காயமடைந்தார். திருவிழாவில் தேர் கீழே விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கீழே கவிழ்ந்த தேரை 2 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மீட்டு தேர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

அதன் பிறகு திருவிழாவை காணவந்த பக்தர்கள் கூட்டம் பக்தி பரவசத்தில் அம்மா அம்மா என கரகோஷம் எழுப்பினர். திடீரென நிலை கவிழ்ந்த தேரால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Festival Chariot fallen down At the Therotta festival in Ulundhurpettai 

இதையும் படிங்க: Free bus travel: கட்டணமின்றி தினமும் 8 லட்சம் பெண்கள் பயணம்