ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று முக்கிய ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் , ஒன்றிய செயலாளர்கள் , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.