டாஸ்மாக் கடைகளில் பல கோடி இழப்பு..!

கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 15 நாட்கள் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

மளிகை, காய்கறி கடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை செயல்பட முதலில் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு அது காலை 10 மணி வரையாக மாற்றப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக், பத்திரப்பதிவு வருவாய், பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

15 நாட்கள் முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் ரூ.2,020 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் முழு ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதால் அதனை ஈடு செய்ய மதுபானங்கள் விலையை அதிகரிக்கும் முடிவை அரசு எடுக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.