School student: அரசு பள்ளியில் முட்டை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

rotten-egg-at-lunch-treatment-for-25-school-students-who-fainted
அரசு பள்ளி

School student: சிதம்பரம் அருகே மதிய உணவு சாப்பிட்s:ட ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி மயக்கம் ஏற்ட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதையடுத்து மாணவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மதிய உணவு சாப்பிடும் பொழுது அவர்களுக்கு அளித்த முட்டை காலாவதியாகி அழுகிப் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Rotten egg at lunch? – Treatment for 25 school students who fainted

இதையும் படிங்க: Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு