Ration shop: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு
ரேஷன் கடை

Ration shop: தமிழகத்தில், நாளை (பிப்ரவரி 26) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும், சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி அட்டைதாரர்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், கைரேகைப் பதிவு வேலை செய்யவில்லை என்றால் கூட, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறித்த விவரங்களை தகவல் பலகையில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக் கிழமை (நாளை) ரேஷன் கடைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிப்ரவரி 26 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை ரேஷன் கடைகளில் எவ்வித சிரமமுமின்றி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Ration shop leave cancelled tomorrow on 26th February

இதையும் படிங்க: Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு