நவம்பர் 30-ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச பொருட்கள் கிடையாது..!

நவம்பர் 30-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படாது என மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் க்ரீம் கல்யாண் என்ற திட்டத்தை கொண்டு வந்தது இதன்படி இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது.

தற்போது வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் காரணத்தினால் இந்த திட்டத்தை நவம்பர் 30-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

நவம்பர் 30-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை கள் வழங்கப்படாது இதுவரை ரேஷன் அட்டையில் இருக்கும் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி என்ற விகிதத்தில் மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது இந்தத் திட்டத்தை 30ஆம் தேதி முதல் மத்திய அரசு தொடராது.

பொதுமக்கள் பலரும் திட்டத்தை சிறிது காலம் கூட நீட்டி எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கையை எழுப்பியுள்ளார்கள்.

இதையும் படிங்க: