பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது ஜூனியர் என்டிஆர் ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்களுக்கு அறுவை சிகிச்சைகள் நடந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆருக்கும் அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்



