வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்பிரமணி குடும்ப தகராறில் தனது மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.சுப்பிரமணி தற்போது இவர் இரவு காவலாளி பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து தனது மகளை திட்டியுள்ளார். இவரது இளையமகன் தட்டிகேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த சுப்பிரமணி தான் வீட்டில் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை கொண்டு தன் மகன் வினோத்தை சுட்டுள்ளார். இதில் குண்டடிபட்ட வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணி அங்கிருந்து தலைமைறைவாகியுள்ளார்.
தற்போது அடுக்கம்பாறை பகுதியில் சுற்றி திறியும் போது ரோந்து பணி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



