நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும்

ஊரடங்கு அமலில் இருந்தாலும், ரேஷன் கடைகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை திறந்திருக்கும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல், 31ம் தேதி வரை, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் ரேஷன் கடைகள் செயல்படாது என, முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால், இந்த மாதம் உணவுப்பொருட்கள் வாங்காதவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், கொரோனா நிவாரண தொகையையும், ஏராளமானோர் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்காக ரேஷன் கடைகளை, குறிப்பிட்ட நேரம் திறக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, நாளை முதல் பொது வினியோக திட்டத்தில் இயங்கும் ரேஷன் கடைகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை திறந்திருக்கும்.