இந்தியாவில் ஸ்புட்னிக்-வி உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியாவின் பனேசியா பயோடெக் என்ற மருந்து உற்பத்தி நிறுவனம், ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி மருந்து உற்பத்தி இன்று தொடங்கியது. இத்தகவல், ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் பனேசியா பயோடெக் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் வெளியாகி உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி நடைபெறுகிறது. முதல் தொகுப்பு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மருந்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக மாஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.