Ram Navami 2022: ராமநவமி பண்டிகை இறைச்சி விற்பனைக்கு தடை

ராமநவமி பண்டிகை
ராமநவமி பண்டிகை

Ram Navami 2022: கர்நாடகாவில் ராம் நவமி பண்டிகை சமயத்தில் இறைச்சி தடை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹிஜாப் சர்ச்சை எழுந்தது.

அந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னரே சற்று ஓய்ந்தது. அதன் பின்னர் இப்போது ஹலால் உணவுகளுக்கு எதிராக திடீரென பரபரப்பை செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் இப்போது ராம் நவமி பண்டிகை சமயத்தில் இறைச்சி தடை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று ஏப்ரல் 10ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படும் நிலையில், பெங்களூரு முழுவதும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் இன்று மூடப்பட்டிருக்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Russian parliament channel: ரஷிய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம்..!!

பெங்களூருவில் இந்து பண்டிகை சமயத்தில் இறைச்சி கூடங்கள் மூடப்படுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக மகா சிவராத்திரி மற்றும் விநாயக சதுர்த்தி ஆகிய நாட்களிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (SDMC) மேயர் முகேஷ் சூர்யன், தெற்கு டெல்லி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான ஏப்ரல் 11 வரை மூட உத்தரவிட்டிருந்தார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி சமயத்தில் ​​பெரும்பாலான குடும்பங்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தைக் கூட சாப்பிடுவதில்லை என்றும் எனவே, பொது மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இறைச்சிக் கடைகளை மூட தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் சூர்யன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: Today horoscope : இன்றைய ராசி பலன்