புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை கூடுகிறது பாக். நாடாளுமன்றம்

நாளை கூடுகிறது பாக். நாடாளுமன்றம்
நாளை கூடுகிறது பாக். நாடாளுமன்றம்

Pakistan Political Crisis: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. முன்னதாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று அதிகாலையில் தேசிய சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. முக்கியமான அமர்வுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் அயாஸ் சாதிக், புதிய பிரதமருக்கான வேட்புமனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும், பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.

திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அமர்வை கூட்டியுள்ள அவர், அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார். இருப்பினும், மதியம் 2 மணிக்கு சபை கூடும் என்று பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Russian parliament channel: ரஷிய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம்..!!

இதுதொடர்பாக அந்த டுவிட்டர் பதிவில், “தேசிய சட்டமன்றக் கூட்டம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11:00 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2:00 மணிக்கு மீண்டும் கூடும்” என்று அதில் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அவரது தலைவிதி முடிவு செய்யப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்கான் ஆவார். மேலும், எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரை ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை.

69 வயதான இம்ரான்கான் வாக்கெடுப்பு நடைபெறும்போது கீழ் அவையில் இல்லை. வாக்கெடுப்பின் போது அவரது கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், அக்கட்சியின் அதிருப்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர். இம்ரான் கானின் நீக்கம், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரிப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் ஷெரிப் விரைவில் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Ram Navami 2022: ராமநவமி பண்டிகை இறைச்சி விற்பனைக்கு தடை