தேவைப்பட்டால் எல்லை தாண்டுவோம்

நாட்டின் சுயமரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலையும் இந்தியா கைகட்டி வேடிக்கை பார்க்காது என்று கூறிய அவர், நாட்டின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த செயலிலும் சமரசம் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், எல்லையில் சீனா பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்தியாவும் அதுபோல பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

இது அந்த நாட்டின் மீதான மோதல் இல்லை என்றும், இந்திய மக்களுக்காகவே இதை செய்து வருவதாகவும் தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் கூறினார்.

ராணுவ தரப்பில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்றும், இரு தரப்பிலும் இதே நிலை நீடித்தால் எல்லையில் படைகளை குறைக்க முடியாது என்று கூறினார். சீனாவும் படைகளை குறைக்க வாய்ப்பு இல்லை எனக் கூறிய அவர், பதற்றத்தை தணிக்க சீனா முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இதனிடையே கிழக்கு எல்லையில் அதிக அளவில் ராடார்கள், ஏவுகணைகளை சீன ராணுவம் குவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள இந்திய விமானப்படைத் தளபதி பகதூரியா, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் மோதுவது நல்லதல்ல என்றும் சீனாவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.