தீபாவளிக்கு வருகிறார் அண்ணாத்த ரஜினி ரசிகர்கள் உற்சாகம் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த.இதை சிறுத்தை சிவா இயக்குகிறார்.இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக இந்த படம் வெளியீடு தள்ளிப்போனது.இந்நிலையில் இன்று அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை, ரிலீஸ் தேதியுடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.சன் பிக்சர்ஸின் இந்த அறிவிப்பை அடுத்து ட்விட்டரில் ரஜினிகாந்த், அண்ணாத்த, அண்ணாத்ததீபாவளி போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டிங் ஆகி உள்ளன.