1 கோடி கரோனா நிவாரண நிதி – ரஜினிகாந்த் !

கரோனா தொற்றால் தமிழகம் திணறி வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என பலர் கொரோனா நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நிவாரண நிதி அளித்துள்ளார்.கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். ரஜினிகாந்த் சார்பாக அவருடைய மகள் சௌந்தர்யா நிதி வழங்கினார்.