10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்,” என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றும் (ஜூலை 21), நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லோசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 5 செ.மீ., பந்தலுார் (நீலகிரி) 4 செ.மீ., ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது