Rain update: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை

weather update
2 நாட்களுக்கு எச்சரிக்கை

Rain update: எதிர்பாராத விதமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. ஏனென்றால் தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை நகர்ந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகி உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தை விட்டு விலகியது பின்புதான் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் நிலவும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

ஜனவரி 30ம் தேதியில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் இன்று மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Halwa Ceremony: கொரோனாவால் கைவிடப்பட்ட ‘அல்வா’ கிண்டும் பழக்கம்