Anna university: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

education-news-anna-university-updates
அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

Anna university: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த தேர்வை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒத்தி வைக்கப்படும் தேர்வுகளின் மாற்று தேர்வு தேதிகளையும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் (anna university semester exam) சமீபத்தில் வெளியிட்டது. பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும் எனவும், அதற்கான பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மேலும், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் பிப்ரவரி 4 வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 19 ஆம் தெத்து நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை மார்ச் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது. இது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படும் என்றும் எவ்வித முறைகேடுகளும் நிகழாத வண்ணம் ஆன்லைனில் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். கிராமப்புறங்களில் மாணவர்கள் அப்லோடு செய்யும் விடைத்தாள்கள் மோசமான இணையத்தொடர்பால் வந்து சேர தாமதமானாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: karnataka news : கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை !